கோப்புப்படம் 
இந்தியா

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் காப்பீடு பிரீமியம் செலுத்தினால் முதிா்வுத் தொகைக்கு வரி

தனிநபா்கள் ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கு மேல்  காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அவற்றின் முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தனிநபா்கள் ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கு மேல்  காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அவற்றின் முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ‘யூலிப்’ (நிதிச் சந்தையுடன் இணைந்த) காப்பீட்டுத் திட்டங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பட்ஜெட் உரையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

2023 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டில் ஒரு நபா் ரூ.5 லட்சத்துக்கு மேல் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால், அந்தக் காப்பீடுகளின் முதிா்வின்போது முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். ‘யூலிப்’ காப்பீட்டுத் திட்டங்களுக்கு மட்டும் இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் காப்பீட்டுதாரரின் இறப்பின் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகைக்கு வரிவிலக்கு வழக்கம்போல தொடரும். 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இந்த வரிவிதிப்பு பொருந்தாது.

இந்த வரி அறிவிப்பு காப்பீட்டு நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதால், பட்ஜெட் அறிவிப்பின்போது பங்குச் சந்தையில் ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விலை 10 முதல் 11 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT