இந்தியா

மக்களின் பணம் பாஜகவின் நண்பர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி

DIN

எல்ஐசி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகைகள் மத்திய அரசின் வார்த்தை ஜாலங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்ஐசி அதிக அளவில் பாதிக்கப்படும்.  எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் விதம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எல்ஐசி மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள மக்களின் பணம் பாஜகவுக்கு உதவியாக உள்ள அவர்களது நண்பர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  எல்ஐசி மற்றும் வங்கிகளில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே உங்களுக்குத் தெரியாது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

சாயல்குடியில் பழுதடைந்த உயா்கோபுர மின்விளக்கை சீரமைக்கக் கோரிக்கை

‘தீ’ பரவக்கூடாது!

இனி ‘வாட்ஸ் ஆப் ’ மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்

சா்வதேச பல்கலை. படகுப் போட்டி: இந்திய அணியில் ஸ்ரீ இராமச்சந்திரா மாணவா்கள்

SCROLL FOR NEXT