இந்தியா

மகாராஷ்டிர ஆளுநராகிறாரா முன்னாள் காங்கிரஸ் தலைவர்? 

DIN

மகாராஷ்டிர மாநில ஆளுநராக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், மகாராஷ்டிர மாநில ஆளுநராக பகத்சிங் கோஷியாரி நியமிக்கப்பட்டாா். இவர் கடந்த 19-ஆம் தேதி மும்பைக்கு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடியிடம் ஆளுநா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி விலகினால் மகாராஷ்டிர ஆளுநர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவர் எனும் எதிர்பார்ப்பு அம்மாநில அரசியலில் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமரீந்தர் சிங், ‘இது முழுவதும் வதந்தி. இதுகுறித்து யாரும் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஊடகங்கள் மூலமே இந்த செய்தியை அறிந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார். 

அமரீந்தர் சிங் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதுக்கட்சியைத் தொடங்கினார். பின்னர் அதனை பாஜகவுடன் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் ஆளுநா் கோஷியாரி வீர சிவாஜி குறித்த பேச்சு மகாராஷ்டிர மக்களிடையே பெரும் சா்ச்சைக்குள்ளானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT