இந்தியா

அதானி குழும நெருக்கடி: இந்திய வங்கித் துறை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

DIN

அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகள் எந்த ஒரு ஆபத்துமின்றி சீராக செயல்படுவதாகவும், மத்திய வங்கி, வங்கிகளிடமிருந்து கடன் பெற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளின் முதலீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறியதாவது: மத்திய வங்கி வங்கித் துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வங்கிகளின் நிதி நிலைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றவர்களை மத்திய வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒரு கண்காணிப்பாளராகவும், வங்கிகளை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு என்கிற முறையிலும் இந்திய வங்கிகளையும், அதன் செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT