இந்தியா

கர்நாடக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

DIN


புதுதில்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக கட்சியின் மூத்த அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள  நிலையில், பேரவைத் தோ்தலை முழுவீச்சில் எதிா்கொள்ள ஆளும் பாஜக முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்கள் சந்தித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக கட்சியின் மூத்த அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை அறிவித்துள்ளார். 

கட்சியின் மூத்த அமைப்பாளரான பிரதான், கடந்த காலங்களில் பல தேர்தல்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதான், ஒரு திறமையான அரசியல்வாதி, அவர் முக்கியமான தென் மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்பதற்காக உள்ளூர்நிலைகளில் உள்ள உள்கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வேளையில் ஈடுபட்டு, மாநில அமைப்பை வலுப்படுத்தும் செயலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT