இந்தியா

ராணுவத்தில் தந்தை இறந்து 20 ஆண்டுகள்; மகள் வந்துவிட்டார் அதே பணிக்கு

DIN

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த மேஜர் நவ்நீத் வாட்ஸ், ராணுவப் பணியின்போது இறந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. அவரது மகள் இனயத் வாட்ஸ் இன்று ராணுவத்தில் இணைந்துவிட்டார்.

மூன்றாவது தலைமுறையாக இனயத் வாட்ஸ் தற்போது ராணுவப் பணியில் சேர்ந்திருக்கிறார். அவரது தாத்தாவும் ஒரு ராணுவ வீரர்தான், தனது குடும்பப் பெருமையைக் காக்க, இரண்டரை வயதில் தனது தந்தையை இழந்து 20 ஆண்டுகள்.. இன்று அவரும் ஒரு ராணுவ அதிகாரி.

இனயத் வாட்ஸ் தனது பெற்றோருக்கு ஒரே மகள். அவருக்கு 2.5 வயதாக இருக்கும் போதே, தனது அன்பு தந்தை இந்த நாட்டுக்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார். தனது தந்தையின் முகம் கூட நினைவிருக்காத வயதில் தந்தையை இழந்த துயரத்தில் அவர் துவண்டுவிடவில்லை. தானும் வளர்ந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவைக் காணத் தொடங்கிவிட்டார்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் வரும் ஏப்ரல் மாதம் ராணுவ பயிற்சிக்காக இணையவிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தியமங்கலம் வந்த ராஜீவ் காந்தி ஜோதிக்கு வரவேற்பு

வெள்ளோடு விவேகானந்தா பள்ளி 100 % தோ்ச்சி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் கருத்தரங்கம்

கடம்பூா் அருகே வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் காயம்

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

SCROLL FOR NEXT