இந்தியா

ஹிலாரி கிளிண்டன் இன்று மகாராஷ்டிரம் வருகை!

மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வர உள்ளார். 

DIN

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை வர உள்ளார். 

கடந்த இரண்டு நாள்களாக குஜராத் பயணம் மேற்கொண்ட கிளிண்டன், செவ்வாய்க்கிழமை மதியம் மகாராஷ்டிரம் வந்து, இரவு குல்தாபாத் நகருக்குச் சென்று தங்கவுள்ளார்.

புதன்கிழமை அவர் நாட்டின் 12-வது ஜோதிர்லிங்கமான கிரிஷ்னேஷ்வர் கோயிலுக்கும், எல்லோரா குகைகளுக்கும் செல்வார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

அவுரங்காபாத் வருகையின் போது, அவரது பாதுகாப்பிற்காக சுமார் 100 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

திங்களன்று குஜராத்தில் உள்ள லிட்டில் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள உப்பு தொழிலாளர்களை கிளின்டன் பார்வையிட்டு, உப்பு உற்பத்தி மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நாமக்கல் செயலரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT