இந்தியா

தில்லி கலால் கொள்கை: 8வது நபரை கைது செய்தது அமலாக்கத்துறை!

தில்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. 

DIN

தில்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. 

தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் எட்டாவது நபர் ராஜேஷ் ஜோஷி என்பவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு விளம்பர நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்று அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர். 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளி தினேஷ் அரோராவுடன் அவர் நெருங்கிய தொடர்புள்ளவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கோவா தேர்தலுக்காக ஜோஷி, அரோராவிடமிருந்து பணம் பெற்றார். இந்த பணம் கலால் கொள்கை ஊழலின் மூலம் வந்த வருமானம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஜோஷி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை இரண்டு வாரக் காவலில் வைக்க வேண்டும் அமலாக்கத்துறை தெரிவித்தன.

முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ராவை புதன்கிழமை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பிப்ரவரி 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டாவது நபரான ஜோஷி ஆவார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT