இந்தியா

பஞ்சாபில் சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆளில்லா விமானம்!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

DIN

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில், புதன்கிழமை இரவு 9:40 மணியளவில் குர்தாஸ்பூரில் உள்ள அடியா எல்லைப் புறக்காவல் நிலையத்தின் அருகே ஆளில்லா விமானம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தானுக்குத் திரும்பியது.

பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை நோக்கி 16 ரவுண்டுகள் சுட்டனர். மேலும் ஒரு வெடிகுண்டையும் பயன்படுத்தினர். 

இதைத்தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

SCROLL FOR NEXT