அதானி விவகாரம்: செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 
இந்தியா

அதானி விவகாரம்: செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடா்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. அக்குழும நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்த எல்ஐசி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகளும் சரிவடைந்தன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து வருகின்றன.

இந்த நிலையில், பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்துவதிலிருந்து செபி செயலற்று விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதானி குழும விவகாரத்தில், தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பற்றி மத்திய நிதியமைச்சகம் மற்றும் செபி ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஹிண்டர்பெர் அறிக்கையால் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியை சந்தித்ததால், பங்குச் சந்தையில் கடும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.

பங்குச் சந்தையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) செயல்பட்டு வருகிறது. 

பங்குச் சந்தையில் எந்த அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்பதை நீங்கள் நீதிமன்றத்துக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை, இதையெல்லாம் எங்கே சரி செய்ய முடியும் என்பதை சொல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை என்பது வெறும் பணக்காரர்கள் மட்டும் முதலீடு செய்யும் இடமல்ல.. மாறிவரும் வரி விகிதங்களால் ஏராளமான மாத வருவாய் ஈட்டுவோரும் முதலீடு செய்யும் இடமாக உள்ளது. இது தொடர்பாக நீங்கள் நிதியமைச்சகம் மற்றும் நிதித்துறை நிபுணர்களிடமும் பேசலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT