முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை: அசோக் கெலாட்

ராஜஸ்தானின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாக எந்த ஒரு வரியும் அறிவிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
பகிர்:

ராஜஸ்தானின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாக எந்த ஒரு வரியும் அறிவிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அந்த அரசுத் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், ராஜஸ்தானின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாக எந்த ஒரு வரியும் அறிவிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் புதிதாக எந்த ஒரு வரி அறிவிப்பும் இல்லை. கடந்த 4 பட்ஜெட்டுகளிலும் எந்த ஒரு வரியும் மக்களுக்கு விதிக்கப்படவில்லை. மக்களுக்கு இதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநிலத்தின் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →