கோப்புப் படம். 
இந்தியா

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலி

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர்.  

DIN

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர். 

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் திருமண ஊர்வல நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு குதிரை வண்டியில் இன்று அதிகாலை 3 நபர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கர்தோனி கிராமம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென குதிரை வண்டி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர். தகவல் அறிந்ததும் ஊரக காவல் கண்காணிப்பாளர் அனிருத் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அனிருத் குமார் கூறுகையில், மீரட் மாவட்டத்தில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரையுடன் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் தற்போது தலைமறைவாக உள்ளார். விரைவில் கைது செய்யப்படுவார்" என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT