இந்தியா

இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிக்டாக்

இந்தியாவில் இருந்த தங்களது 40 பணியாளர்களை டிக்டாக் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. 

DIN

இந்தியாவில் இருந்த தங்களது 40 பணியாளர்களை டிக்டாக் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. 

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவுடனான கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது. இதனால் இந்தியப் பயனர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. எனினும் இந்தியப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார மந்தநிலை, தடை உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT