திரெளபதி முர்மு 
இந்தியா

13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

DIN

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசனை, நாகாலாந்து மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூசன் ஹரிசந்தனை, சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உக்யே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகார் ஆளுநராக இருந்த பாகு செளவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாசல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, பிகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாசல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ரமேஷ் பயஸ் மகாரஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, லடாக் ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூரின் ராஜிநாமாக்களை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT