ஆன்லைன் மூலம் உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான சொமேட்டோ 225 சிறிய நகரங்களில் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான சொமேட்டோ அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கையின்படி, நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், இந்த நகரங்களின் செயல்திறன் 'மிகவும் ஊக்கமளிக்கவில்லை' என்பதால், 225 சிறிய நகரங்களில் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும், டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் உணவு வினியோக வணிகம் குறைந்ததால் நிறுவனம் ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், "தற்போதைய தேவையின் மந்தநிலை எதிர்பாராதது, இது உணவு வினியோக லாபத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளது. இருந்தபோதிலும், எங்கள் லாப இலக்கை அடைய நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே எண்ணுகிறோம்," என்று தெரிவித்துள்ளது.
சொமேட்டோ இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு வினியோக பயன்பாடுகளில் ஒன்றாகும், மேலும், லாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் சந்தாவை சமீபத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
225 சிறிய நகரங்களில் இருந்து வெளியேறும் நிறுவனத்தின் முடிவு, சுமார் 800 பணியிடங்களுக்கு ஆள்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
'ஜனவரியில் 225 சிறிய நகரங்களில் இருந்து சொமேட்டோ உணவு வினியோக சேவையில் வெளியேறியது, இது டிசம்பர் காலாண்டில் அதன் மொத்த ஆர்டர் மதிப்பில் 0.3 சதவீத பங்களிப்பு' என்று குறிப்பிட்டுள்ளது.
"கடந்த சில காலாண்டுகளில் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை, மேலும், இந்த நகரங்களில் நாங்கள் செய்த முதலீடுகளின் திருப்பிச் செலுத்தும் காலம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் நாங்கள் உணரவில்லை."
இருப்பினும், இந்த நடவடிக்கையால் எந்த நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நிறுவனம் தனது லாபத்தை அதிகரிக்கப்பதற்காக, "நாங்கள் ஜனவரி பிற்பகுதியில் சொமேட்டோ தங்கம் என்ற ஒரு புத்தம்-புதிய உறுப்பினர் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக மக்களை பணிநீக்கம் செய்யும் நேரத்தில், சொமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், சொமேட்டோ சுமார் 800 பணியாளர்களை பணியமர்த்த இருப்பதாக லிங்டினில் அறிவித்து பணியாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கினார். இருப்பினும், 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இது பணியாளர்களிடம் இருந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர், பொது அதிகாரி, வளர்ச்சி மேலாளர், தயாரிப்பு உரிமையாளர் மற்றும் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர் உள்ளிட்ட ஐந்து பதவிகளுக்கான விளம்பரங்களை லிங்டினில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.