முகப்பு
இந்தியா

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் கைது!

கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

கேரள முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ. 18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைஃப் மிஷன் திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாள்களாக சிவசங்கரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று இரவு கைது செய்தது.

தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →