இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரம் செல்கிறார் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்திற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரத்திற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமித் ஷா நாக்பூரில் உள்ள பி.ஆர்.அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தவும், ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுடன் உரையாடவும், கோலாப்பூரில் பேரணியில் உரையாற்றவும் உள்ளார்.
பிப்.18ல் தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாளில், அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறார். மேலும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் சர்சங்கசாலக் கேசவ் பட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். புணேவில் டைனிக் சாகல் செய்தித்தாள் ஏற்பாடு செய்த ஒத்துழைப்பு மாநாட்டில் ஷா கலந்து கொள்கிறார்.
பிப்ரவரி 19 ஆம் தேதி, புணேவில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றில் உருவாக்கப்பட்ட சிவ சிருஷ்டி தீம் பூங்காவின் முதல் கட்டத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் வழிபாடு செலுத்துகிறார்.