கோப்புப்படம் 
இந்தியா

பிப்ரவரி 23-ல் அமித்ஷா கர்நாடகம் பயணம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிப்ரவரி 23 ஆம் தேதி கர்நாடகம் மீண்டும் செல்கிறார்.

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிப்ரவரி 23 ஆம் தேதி கர்நாடகம் மீண்டும் செல்கிறார்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னணி தலைவருமான அமித் ஷா, அண்மைக்காலமாக கா்நாடகத்திற்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறாா். கடந்த 11ஆம் தேதி தக்ஷின கன்னடா மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிப்ரவரி 23 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மீண்டும் செல்கிறார்.

பெங்களூரு மற்றும் பல்லாரியில் நடைபெறும் இரண்டு முக்கிய பொது நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க, கட்சித் தலைவர்களுடன் அவர் ஒரு சந்திப்பையும் நடத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் அமித் ஷா கர்நாடகம் வருகை தொடர்பாக அம்மாநில போக்குவரத்து மற்றும் எஸ்டி நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு இன்று பல்லாரி மற்றும் சந்தூரில் கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் அமித் ஷா, 12 நாட்களில் கர்நாடகத்துக்கு வருகை தரவிருப்பது இது இரண்டாவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT