முகப்பு
இந்தியா

மூன்று நாள்களில் மாநாடு: காங். பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு மூன்று நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
சோதனை நடைபெறும் காங்கிரஸ் பிரமுகர் வீடு
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு மூன்று நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், 2024 மக்களவை தேர்தலையொட்டி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது கிடைத்த கருத்துகள், அனுபவங்களை அடிப்படையாக வைத்து 6 முக்கிய தீா்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அக்கட்சி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வரும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுரங்க ஊழல் வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், எம்எல்ஏக்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் பூபேஷ் பகெல் டிவிட்டரில் பதிவிட்டது, “பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றி மற்றும் அதானி குறித்த உண்மையை அம்பலப்படுத்தப்பட்டதாக் பாஜக விரக்தி அடைந்துள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை மூல காங்கிரஸ் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் மன உறுதியை உடைக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →