இந்தியா

'வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட இடைக்காலத் தடை'

DIN

பெங்களூரு: பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள வீரப்பன் குறித்த ஆங்கில நூலை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பெங்களூரில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் புதன்கிழமை (பிப்.22) பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள வீரப்பன் குறித்து ஆங்கில நூலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புத்தகத்தில் தன்னிடம் கருத்துக்கள் பெறாமல், தன்னைப்பற்றி இந்த புத்தகத்தில் பல பதிவுகள் உள்ளதாகவும், அந்த பதிவுகள் அவதூறு கருத்துகளாக இருக்கலாம் என்பதால் தன்னிடம் புத்தகத்தின் பிரதியை கொடுத்து ஒப்புதல் பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது என்று நக்கீரன் தலைமை ஆசிரியர் கோபால் சார்பில் பெங்களூரு இரண்டாம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு மீது செவ்வாய்க் கிழமை நீதிபதி சீனிவாசன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது நக்கீரன் கோபால் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் நடேசன், நக்கீரன் கோபாலிடம் அனுமதி பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது.

ஆகையால் இந்த புத்தக வெளியீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நக்கீரன் கோபால் தரப்பு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சீனிவாசன், வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து நக்கீரன் கோபாலிடம் அனுமதி பெற்ற பின்பு தான் சிவசுப்பிரமணியன் புத்தகத்தை வெளியிட வேண்டும். தடை உத்தரவை மீறி புத்தகம் வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர் நடேசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT