முகப்பு
இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 21 பிப்ரவரி, 2023 at 11:54 AM
பகிர்:


ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் பனிஹால் அருகே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக இன்று காலை முதல் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.