முகப்பு
இந்தியா

கல்லூரி முதல்வரை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர் கைது!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில்  கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில்  கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தூரில் உள்ள பிஎம் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா(49). அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா. 

திங்கள்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி முதல்வர் வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிக்கொடிருந்தபோது, சர்மா முதல்வரை வழிமறித்து, மதிப்பெண் பட்டியலை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும்போதே, தனது கையில் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை முதல்வர் மீது ஊற்றி தீ வைத்து கொள்ளுவிட்டு தப்பியோடியுள்ளார். 

அருகில் இருந்தோர் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் முதல்வர் உயிருக்குப் போராடி வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, தப்பியோடிய இளைஞரை போலீஸார் கைது செய்தது. விசாரணையில் அதே கல்லூரியில் முன்னாள் மாணவன் என்பதும், மதிப்பெண் சான்றிதழை வழங்கக்கோரி பலமுறை முதல்வரை சந்தித்து வந்ததாகவும், தராமல் இழுத்தடித்த நிலையில், ஆத்திரம் அடைந்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகவும் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக சர்மா கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →