நாடாளுமன்றத்தில் சிவசேனைக்கான அறையையும் இழந்தார் உத்தவ்: ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கீடு!
நாடாளுமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனையின் அறை ஒதுக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனையின் அறை ஒதுக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.
மேலும், கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மக்களவையில் சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை எண் 128-ஐ ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி மக்களவைச் செயலகத்துக்கு ஷிண்டே தரப்பினர் கடிதம் எழுந்தியிருந்தனர்.
இந்நிலையில், சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற அறையை ஷிண்டே தரப்பினருக்கு ஒதுக்குவதாக மக்களவைச் செயலகமும் இன்று காலை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்கு அங்கீகாரம்: தோ்தல் ஆணையம்
இதற்கிடையே, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.