மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு... அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு!
நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முழு உற்பத்திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முழு உற்பத்திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மார்ச் 16 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தங்கள் முழு உற்பத்தி திறனுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அனுமதி!
இதுதொடர்பாக டாடா பவர், அதானி மின் நிலையங்கள் உள்ளிட்ட 15 அனல் மின் நிலையங்களுக்கு இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது.