உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள்!
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள் அமையவுள்ளன. இதில் 5 விமான நிலையங்கள் சர்வதேச அளவில் அமையவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் 20 விமான நிலையங்கள் அமையவுள்ளன. இதில் 5 விமான நிலையங்கள் சர்வதேச அளவில் அமையவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய உத்தரப் பிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில், மாநில வான்வெளி போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய பணிகள் தொடங்கப்படவுள்ளன.
தற்போது மாநிலத்தில் 8 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவைகளிலிருந்து 80 பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும்.
Advertisement
Advertisement
ஜெவார், அயோத்தியா ஆகிய பகுதிகளில் சர்வதேச விமான நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெவார் விமான நிலையத்தில் ஓடுதளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 4 விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. அலிகார், ஆஸம்கார், மொரதாபாத், ஷ்ரவஸ்டி, சித்ரகூட், சோன்பத்ரா ஆகிய 6 நகரங்களில் விரைவில் முடிவடையவுள்ளன எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.