இந்தியா

கலால் கொள்கை: கேஜரிவாலின் உதவியாளரிடம் விசாரணை!

தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். 

DIN

தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிபவ் குமாரின் வாக்குமூலத்தை புலனாய்வாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

கலால் கொள்கை 2021-22-ஐ அமல்படுத்தியதில் சிசோடியா கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதன்பேரில், சிசோடியா உள்ளிட்ட 15 போ் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்டில் வழக்குப் பதிவு செய்தனர்.

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறையினா் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து ஜோஷி உள்பட 9 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று கேஜரிவாலின் பிஏவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT