முகப்பு
இந்தியா

தில்லி கிடங்கில் தீ விபத்து: காரணத்தை வெளியிட்ட காவல் துறை!

தெற்கு தில்லியின் ஃபதேபூர் பெரியில் உள்ள கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: தெற்கு தில்லியில் உள்ள கிடங்கு ஒன்றில், இன்று (பிப். 23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தில்லியின் தெற்குப் பகுதியிலுள்ள ஜௌனாபூரில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாலை 1.15 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு, காலை 8 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதியாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தீப்பிடித்த கிடங்கில் வண்ணங்கள், பொம்மைகள், சிலைகள் போன்றவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

ஹரியாணா மாநிலம் குர்கான் என்ற பகுதியில் வசிக்கும் முகேஷ் கோயல் என்பவருக்கு சொந்தமானது இந்த குடோன். தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுகிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →