இந்தியா

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர். ஹவாய் தலைமையிலான விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நாட்டில் அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட விசாரணை இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலர், மாநில தலைமைச் செயலர்கள், மாநில உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT