‘இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதே எங்கள் போராட்டம்’: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா 
இந்தியா

‘இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதே எங்கள் போராட்டம்’: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அசாம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் தில்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் இருந்து பவன் கேரா இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜாமீன் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பவன் கேரா, “நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி அச்சமின்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவரின் கரங்களை வலுப்படுத்துவேன்.

எந்தவித சட்டத்தையும், வழிகாட்டுதலையும் பின்பற்றாமல் தவறான வழியில் என்னை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர். என்னுடைய கருத்துரிமையை நீதிமன்றம் பாதுகாத்ததன் மூலம் நீதித்துறையின் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT