நாட்டிலேயே மிகவும் காஸ்ட்லியான தோசையாகக் கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்பனை செய்யப்படுகிறது தெரியுமா?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்துள்ள ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில்தான் இந்த மிக விலை அதிகம் கொண்ட தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,000 மட்டுமே.
இந்த தோசையின் சிறப்பு என்னவென்றால், 24 காரட் தங்கத்தால் மூலம் பூசப்பட்டிருக்கும். இது பற்றி செய்தி அறிந்த அக்கம் பக்கத்தினரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த உணவகத்துக்கு வந்து சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட தோசை ஒரு பிடிபிடிக்கிறார்கள்.
வழக்கமாக கையேந்திபவனில் ரூ.30 முதல் ஒரு நல்ல உணவகத்தில் தோசை ரூ.150 வரை விற்பனையாகும். ஆனால், இந்த தங்க தோசையின் விலை ரூ.1000 என்று நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, இதனை ஏராளமானோர் வாங்கி ருசிபார்த்து வருகிறார்கள்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
தோசையை தவாவில் ஊற்றிய பிறகு, நெய் ஊற்றுவது போல தங்கத்தைக் கரைத்து தோசையின் மீது ஊற்றுகிறார்கள். இந்த தங்கக் கரைசலுக்குத்தான் இவ்வளவு விலை அதிகம். இதற்கு இணையாக, வறுத்த முந்திரி, பாதாம், சுத்தமான நெய், பல வகை சட்னிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் வறுத்த வேர்க்கடலை, மூக்கடலை, இட்லிப் பொடியும் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் வகையில் உள்ளது.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 தோசைகள் விற்பனையாகிறதாம். இந்த கடையில் இதுபோன்ற பல புதுவிதமான உணவுகளும் கிடைக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.