இந்தியா

கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்!

DIN


பெங்களூரு: கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில், 2 ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் மீது கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மர்மநபர்கள் சிலர் கற்களை வீசினர். இதில், ரயிலின் இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

வந்தே பாரத் ரயில்கள் மீது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடந்த ஜனவரியில் 21 கல்வீச்சு சம்பவங்களும், இந்த மாதம் 13 கல்வீச்சு சம்பவங்களும் ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வேதனை தெரிவித்துள்ளது. 

இதேபோன்ற சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT