இந்தியா

பாலியல் புகார்: ஹரியாணா அமைச்சர் சந்தீப் சிங் ராஜிநாமா 

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

DIN

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

ஹரியாணாவில் மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் சந்தீப் சிங். இவர் மீது பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியியல் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சந்தீப் சிங் மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சந்தீப் சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில் ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பை சந்தீப் சிங் ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து சந்தீப் சிங் கூறியதாவது, எனது இமேஜை கெடுக்க முயற்சி நடக்கிறது. என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன்.

விசாரணை அறிக்கை வரும் வரை விளையாட்டு துறையின் பொறுப்பை முதல்வரிடம் ஒப்படைக்கிறேன்" என்று தெரிவித்தார். சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT