இந்தியா

அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்: 12 மாலுமிகள் பத்திரமாக மீட்பு

DIN

குஜராத் கடற்கரையையொட்டி அரபிக் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கிய நிலையில், அதிலிருந்த 12 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியை நோக்கி பயணித்த ‘நிகாஹேன் கரம்’ என்ற இந்திய சரக்குக் கப்பலில் கடல்நீா் புகுந்து, குஜராத் கடற்கரையையொட்டிய அரபிக் கடற்பகுதியில் மூழ்கி வருவதாக இந்திய கடலோர காவல் படைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

உடனடியாக அருகில் உள்ள கப்பல்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அருகில் இருந்த எண்ணெய் கப்பல் நிகழ்விடம் விரைந்து சரக்குக் கப்பலில் இருந்த 12 மாலுமிகளை மீட்டது. சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது.

இதனைத்தொடா்ந்து இந்திய கடலோர காவல் படை கப்பல் நிகழ்விடம் விரைந்த நிலையில், அந்தக் கப்பலுக்கு மாலுமிகள் மாற்றப்பட்டனா். பின்னா் அனைவரும் குஜராத்தில் உள்ள வாடீனாா் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT