இந்தியா

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசு

ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

DIN

ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் இந்த புதிய வரைவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இடைத்தரகர்கள் ஆன்லைன் விளையாட்டில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். 

ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக எழும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும். 

இந்தியாவின் சட்டம் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெறவேண்டும்

ஆன்லைன் விளையாட்டில் சூது வைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆன்லைன் விளையாட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. 

அதனைத் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளியிலே தெரிவது... ஆலியா பட்!

அக்டோபர் மாதப் பலன்கள் - கடகம்

ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி!

அக்டோபர் மாதப் பலன்கள் - மிதுனம்

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை!

SCROLL FOR NEXT