இந்தியா

திரையரங்குகளில் வெளி உணவுப் பொருள்களுக்குத் தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்

DIN

வெளியில் இருந்து உணவுப் பொருள்கள், தண்ணீர் கொண்டு வருவதைத் தடை செய்ய திரையரங்குகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. 

அப்போது நீதிபதிகள், 'திரையரங்கில் உணவு, பானங்கள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமைக்க திரையரங்குகளுக்கு முழு உரிமை உண்டு.

மக்கள் வெளியில் இருந்து உணவு, பானங்கள் கொண்டு வருவதற்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம். அதேநேரத்தில் தியேட்ரில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும், குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களை அனுமதிக்கலாம்.

அதுபோல பார்வையாளர்களும் திரையரங்குகளுக்குள் உணவுகளை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT