உலகின் மிக உயரமான சியாச்சின் போர்களத்தில் முதல் முறையாக பெண் ராணுவ வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில்தான் உலகத்திலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை உள்ளது.
கடந்த 1984-இல் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் சியாச்சின் சிகரத்தில் மோதிக் கொண்ட பிறகு, அப்பகுதியில் இந்திய வீரர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் ‘ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்’ பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிவா செளஹான் என்ற பெண் வீராங்கனை முதல் முறையாக சியாச்சினில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
15,632 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான போர்க்களமான குமார் போஸ்ட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், குமார் போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீரர் கேப்டன் சிவா செளஹான். பல்வேறு கடின பயிற்சிகளுக்கு பிறகே அவர் பணியமர்த்தப்பட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
உலகின் உயரிய போர்க்களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கேப்டன் சிவா செளஹானுக்கு பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.