கோப்புப் படம் 
இந்தியா

2 நாள் பயணமாக ராஜஸ்தான் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று ராஜஸ்தானுக்குச் செல்கிறார். 

IANS

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று ராஜஸ்தானுக்குச் செல்கிறார். 

ஜெய்ப்பூரில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்காவை அவர் திறந்துவைக்கிறார். 

முர்மு ராணுவ விமானம் மூலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்குச் செல்கிறார். பின்னர், சிவில் லைன்ஸில் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்காவைத் திறந்துவைக்கிறார். 

ஜெய்ப்பூர் மற்றும் மௌண்ட் அபுவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பாலியில் நடக்கும் சாரணர் வழிகாட்டியின் தேசிய ஜம்போரியிலும் அவர் கலந்துகொள்கிறார். 

புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்கா வாரத்தில் இரண்டு நாள்கள் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த பூங்கா சுமார் ரூ.9.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பூங்காவில் உலோகத்தால் செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் 12 அடி சிலையும், மகாராணா பிரதாப் மற்றும் அவரது குதிரை சேதக் ஆகியோரின் பளிங்கு சிலையும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT