இந்தியா

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா?

DIN

கரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது முன்னெச்சரிக்கை தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்) தேவைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் சீனா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, சீனா, சிங்கப்பூா், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இரண்டாம் பூஸ்டர் டோஸுக்கான அவசியம் ஏற்படவில்லை என்றும், முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை முதலில் முழுமையாக போட்டு முடிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 134 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 2,582 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 220.11 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டாவது தடுப்பூசி 95.13 கோடி பேருக்கும், பூஸ்டர் டோஸ் 22.41 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT