ஆந்திர அரசு அளித்த வீட்டுமனையை நிராகரிக்கும் 95 ஆயிரம் பெண்கள் 
இந்தியா

ஆந்திர அரசு அளித்த வீட்டுமனையை நிராகரிக்கும் 95 ஆயிரம் பெண்கள்

ஆந்திர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பயனாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள வழங்கிய வீட்டுமனையில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் வீடு கட்ட மறுத்துவருகிறார்கள்.

ENS

அமராவதி: ஆந்திர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பயனாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள வழங்கிய வீட்டுமனையில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் வீடு கட்ட மறுத்துவருகிறார்கள்.

மனித நடமாட்டம் இல்லாத அல்லது சுடுகாடுகளுக்கு அருகில் வீட்டு மனை போன்ற பல்வேறு காரணங்களால், சுமார் 95 ஆயிரம் பேர், தங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு ஒதுக்கிய வீட்டு மனையில் வீடு கட்ட மறுத்துள்ளனர்.

இதனால், மாற்று இடங்களைத் தேடி அவற்றை பயனாளர்களுக்கு வழங்க ஆந்திர அரசு மேலும் 800 கோடி செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து குடியிருப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், மக்கள் கேட்கும் வகையில் வீட்டு மனையை ஒதுக்க வேண்டும் என்றால், தனியாரிடமிருந்து சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்த வாங்க வேண்டியதிருக்கும். ஏற்கனவே மக்களுக்கு அளித்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியிடம் குடியிருப்புத் துறை அதிகாரிகள் பேசுகையில், 95,106 பயனாளர்கள் தங்களது வழங்கப்பட்ட தலா 1.5 சென்ட் வீட்டு மனையைப் பெற்றுக் கொண்டு வீடு கட்டத் தயாராக இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 30 சதவீத நிலப்பகுதி, சுடுகாடு போன்ற இடங்களுக்கு அருகில் அமைந்திருப்பதையும் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தாங்கள் வசிக்கும் கிராமத்திலேயே தங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறும், அப்படி செய்தால்தான் தங்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT