இந்தியா

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவில் கோழி இறைச்சி: எந்த மாநிலத்தில் தெரியுமா?

நான்கு மாதங்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி (சிக்கன்) மற்றும் பருவகால பழங்கள் வழங்க மேற்குவங்கம் ரூ.371 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

DIN

நான்கு மாதங்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி (சிக்கன்) மற்றும் பருவகால பழங்கள் வழங்க மேற்குவங்கம் ரூ.371 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் தற்போது மதிய உணவுடன் தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளுடன் சிக்கன் மற்றும் பருவகாலப் பழங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் ஊட்டச்சத்துகள் மாணவர்களுக்கு போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் , இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு கோழி இறைச்சி (சிக்கன்) மற்றும் பருவகாலப் பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது தொடர்வது கடினம் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவில் கூடுதல் ஊட்டச்சத்துகள் வழங்கப்படுவது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்த கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாரத்துக்கு ரூ.20 செலவாகும். இந்த கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுவது அடுத்த 16 வாரங்களுக்குத் தொடரும். இதன்மூலம், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1.6 கோடி மாணவ-மாணவிகள் பயனடைவர். இந்த திட்டத்துக்கான செலவினை மத்திய-மாநில அரசுகள் 40:60 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும். இந்த திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.371 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்துத் தேர்தலை மையப்படுத்தியே இந்த திட்டத்தினை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதும், எல்லாவற்றிலும் அரசியல் செய்வதே பாஜகவின் வேலை என திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT