இந்தியா

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை: அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு

பெங்களூரு - சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார்.

DIN

பெங்களூரு - சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார்.

பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலை 8 வழிச்சாலை பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.

இந்நிலையில், இந்த விரைவுச் சாலையின் கட்டமைப்புப் பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழி ஆய்வு மேற்கொண்டார். கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பட்டீலும் உடனிருந்தார்.

அதேபோல், ரூ. 4,473 கோடி மதிப்பில் பெங்களூருவிலிருந்து மைசூரு வரை 118 கி.மீட்டர் தொலைவுக்கு கட்டமைக்கப்பட்டு வரும் விரைவுச் சாலையும் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி பந்தக்கால் முகூா்த்தம்

மயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் குறைவு!

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

நெகிழியில்லா கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

SCROLL FOR NEXT