இந்தியா

பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு சிறுத்தை பற்றி ஊடகங்கள் கூறுகின்றன:  ராகுல்காந்தி வேதனை

DIN


லக்னௌ: பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு சிறுத்தை பற்றி ஊடகங்கள் கூறுகின்றன என்று ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் நடைப்பயணமாக செல்லும்  "பாரத் ஜோடோ யாத்திரை" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய கேரளம், கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தரப்பிரதேசத்திற்குள் சென்றடைந்துள்ளது. இந்த பயணம் 150 நாள்கள் நடைபெறுகிறது. 

இந்நிலையில், இந்திய ஒற்றுமை நடைப்பயண த்திரையின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தின் பாக்பத்  நகரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறுத்தைகள் காட்டில் சுற்றித் திரிவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன’ ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT