இந்தியா

நீட் முதுகலை 2023: இன்று தொடங்குகிறது விண்ணப்பப் பதிவு

முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

DIN


முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

ஜனவரி 5ஆம் தேதி முதல் நீட் முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்குவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் natboard.edu.in மற்றும் nbe.edu.in ஆகிய இணையதளங்களில் இன்று மாலை 3 மணி முதல் செயல்பாட்டக்கு வரும் என்றும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 25ஆம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் முதுகலை 2023ஆம் தேர்வு மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT