முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் ராகுலின் நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தர பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவில் மீண்டும் நுழைகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தர பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவில் மீண்டும் நுழைந்தது. 

தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லிக்குள் நுழைந்தது.

சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் ராகுலின் நடைப்பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்றுடன் உத்தர பிரதேசத்தில் பயணம் முடிந்த நிலையில் இன்று ஹரியாணாவின் உச்சகான் பகுதியில் தொடங்குகிறது. இன்று சனொலி பானிபட் சாலையில் இருந்து ஹூடா மைதானம் வரை நடைப்பயணம் நடைபெறுகிறது. 

ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடைபயணம் ஹிமாசல் வழியாக ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →