வங்கி மோசடிகளில் பத்தில் ஒன்று இவர்களால்தான் நடக்கிறதாம்! 
இந்தியா

வங்கி மோசடிகளில் பத்தில் ஒன்று இவர்களால்தான் நடக்கிறதாம்!

பல வங்கி மோசடிகளில், குற்றம் நடந்த உடனே, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் பணம் திரும்பப் பெறப்படுவதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் எளிதாகிறது.

DIN

சென்னை: பல வங்கி மோசடிகளில், குற்றம் நடந்த உடனே, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் பணம் திரும்பப் பெறப்படுவதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் எளிதாகிறது.

தற்போதெல்லாம் சைபர் குற்றங்கள் அதிகரித்திருப்பதால், காவல்துறையினரும் சைபர் பிரிவை பலமாக்கி, குற்றங்கள் நிகழ்ந்த உடனே பணம் கைமாறிய வங்கிக் கணக்கை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். பணமும் பல வழக்குகளில் திரும்பக் கிடைக்கிறது.

ஆனால், தாமதம் அல்லது தகவல்கள் போதுமான அளவில் இல்லாதது போன்றவற்றினால் எல்லா வழக்குகளிலும் இந்த சுபம் போடப்படுவதில்லை.

அது மட்டுமல்லாமல், பல வங்கி மோசடிகளில், வெளிநபர்களை விடவும், பத்து மோசடிகளில் ஒன்று வங்கியில் இருப்பவர்களாலேயே நடக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல்கதான் வங்கி வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்திருக்கிறது.

அதாவது, சென்னையில் நடந்த வங்கி மோசடிகளில் 43 சதவீதத்துக்கும் மேற்பட்ட மோசடிகள் வங்கி ஊழியர்களால்தான் நடந்திருப்பதும், குற்றம் நடந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் அவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஓராண்டுக்குப் பின் குற்றம் கண்டுபிடிக்கப்படுவதால், விசாரணை சவாலாக மாறுவது மட்டுமல்ல, மோசடி செய்யப்படும் பணத்தை மீட்பதும் சவாலாகிறது.  இதுவரை நடந்த 400க்கும் மேற்பட்ட வங்கி மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்திருக்கும் பல தகவல்கள் வாடிக்கையாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்துகிறது.

பண மோசடியில் சுமார் 20 வழக்குகள், ஒரு கோடிக்கும் மேல்பட்ட தொகையாக உள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இதுவரை ஒரே ஒரு வழக்கில்தான் பணம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், மக்களிடம் எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன. இதனைத் தவிர்க்க வங்கிகளும் சைபர் காவல்துறையும் இணைந்து அவ்வப்போது பல நவீன முன்னேற்றங்களை ஏற்படுத்தி, மக்களிடைம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளைப் பெற்று அதனை செயல்படுத்துவதும் சிறந்ததாக இருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!

ரூ. 1300 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

பிரிட்டனில் முதல்வர் மு.க.ஸ்டாலின்! வரவேற்று Selfie எடுத்த தமிழர்கள்!

பேருந்தை மறித்த யானைகள்! பதற்றமான நொடிகள்! | CBE

SCROLL FOR NEXT