கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 
இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

DIN

கரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய்யெதிர்ப்பாற்றல் எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வில், கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஒருக் கூற்றையே உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ இதழில் வெள்ளிக்கிழமை வெளியான ஆய்வு முடிவுகளில், இரண்டு தடுப்பூசிகளுமே, தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவதற்கு முன் மனிதர்களிடம் இருந்த நோய் எதிர்ப்பாற்றலை தடுப்பூசி செலுத்திய பிறகு அதிகரித்திருப்பதை உறுதி செய்கின்றன.

2021 ஜூன் முதல் 2022 ஜனவரி வரை, பெங்களூரு, புனே பகுதிகளிலிருந்து 18 - 45 வயதுடைய 691 பேர் இந்த ஆய்வுக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சிலருக்கு 28 நாள்கள் இடைவெளியில் கோவாக்சினும், சிலருக்கு மூன்று மாத கால இடைவெளியில் கோவிஷீல்டும் போடப்பட்டது.

இவர்கள்  ஆறு முறை நோய்யெதிர்ப்பாற்றல் தொடர்பான பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பைவிட நோய்எதிர்பாற்றல் அதிகரித்திருந்தது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய்எதிர்பாற்றலின் காலமும் அளவும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது கரோனா பாதிக்காமல், கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மிக அதிகமான நோய்எதிர்ப்பாற்றலும், அதிக காலம் எதிர்ப்பாற்றல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, காலப்போக்கில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவந்த போதிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில், மிக நீண்ட காலத்துக்கு ஆன்டிபாடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

அதுபோல, கோவிஷீல்டு தடுப்பூசி கரோனா வைரஸ் மட்டுமல்லாமல் அதன் உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்டவற்றுக்கும் சிறப்பான எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்காவிட்டாலும், கோவாக்சினைக் காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக இருந்தாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT