இந்தியா

பஞ்சாபில் புதிய அமைச்சர் பதவியேற்பு!

பஞ்சாப் அமைச்சராக பல்பீர் சிங் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

பஞ்சாப் அமைச்சராக பல்பீர் சிங் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருந்த ஃபௌஜா சிங் சராரி தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று காலை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், புதிய அமைச்சராக பல்பீர் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பகவந்த் சிங் முன்னிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிந்த் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர்களை மிரட்டி அமைச்சர் ஃபெளஜா சிங் பணம் கேட்கும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்த ராஜிநாமா நடைபெற்றுள்ளது.

மேலும், பஞ்சாப் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

டிஜிட்டல் மயமாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

சம்மதம் இல்லாமல் கருப்பை அகற்றம்! பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்!

SCROLL FOR NEXT