இந்தியா

பஞ்சாப் அமைச்சர் ஃபௌஜா சிங் சராரி ராஜிநாமா!

பஞ்சாப் அமைச்சர் ஃபௌஜா சிங் சராரி, முதல்வர் பகவந்த் மானின் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தார். 

PTI

பஞ்சாப் அமைச்சர் ஃபௌஜா சிங் சராரி, முதல்வர் பகவந்த் மானின் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தார். 

தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருந்த இவர், சமீபத்தில் ஒருவரிடம் மிரட்டி பணம் கேட்பதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து, இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. 

இதையடுத்து, பஞ்சாப் எதிர்க்கட்சிகள் சரரியை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சராரி இன்று ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் சராரி தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜிநாமா செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் கூறியுள்ளார். 

ஆனால், சராரி தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எழுந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT