கோப்புப் படம். 
இந்தியா

உ.பி.,யில் மொபைல் வெடித்ததில் இளைஞர் விரலில் காயம்

உ.பி.,யில் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் இளைஞரின் விரலில் காயம் ஏற்பட்டது.

DIN

உ.பி.,யில் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் இளைஞரின் விரலில் காயம் ஏற்பட்டது.

உத்தர பிரேத மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தின் ஹிஜாம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஹிமான்ஷு கூறுகையில், "நான் அழைப்பில் இருந்தபோது எனது மொபைல் போனில் தீப்பிடித்தது. இதில் எனது விரலில் காயம் ஏற்பட்டது. நான் அம்ரோஹாவில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மொபைலை வாங்கினேன்.

மேலும் மொபைலுக்கான ரசீதையும் அவர் காட்டினார். இது முதல் வழக்கு அல்ல, கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. 2019 டிசம்பரில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் போன் வெடித்ததில் காயமடைந்தார்.

இதேபோல் 2019 மார்சில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது புதிய மொபைல் போன் வெடித்ததில் தீக்காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி.,யில் இளைஞரின் மொபைல் போன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT