இந்தியா

வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப் பயணம்: ராகுல் காந்தி

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை நடைப்பயணத்துக்கு நாடு முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் இதனை தெரிவித்தார். 

இது குறித்து ராகுல் காந்தி பேசியதாவது: பாரதத்தை இணைப்போம் நடைப்பயணம் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஒற்றுமைப் பயணத்தின் மூலம் நாட்டு மக்களின் பிரச்னைகள் கேட்டறியப்பட்டு வருகிறது. ஹரியாணாவில் இந்த நடைப்பயணம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நடைப்பயணத்தை தமிழகத்தில் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்ற சிறப்பான வரவேற்பு கேரளத்திலும் கிடைத்தது. பாஜக ஆளும் கர்நாடகத்தில் அப்படி வரவேற்பு கிடைக்காது எனக் கூறப்பட்டது. ஆனால், ஒற்றுமைப் பயணத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

தென்னிந்தியாவில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டபோது கிடைத்த வரவேற்பு மகாராஷ்டிரத்துக்கு செல்லும் போது கிடைக்காது என்றார்கள். ஆனால், தென்னிந்தியாவைக் காட்டிலும் மகாராஷ்டிரத்தில் மேலும் சிறப்பான வரவேற்புக் கிடைத்தது. பின்னர், மத்தியப் பிரதேசத்தில் வரவேற்பு கிடைக்காது என்றார்கள். அங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஹரியாணவுக்குள் ஒற்றுமைப் பயணம் நுழையும்போது பாஜக ஆளும் மாநிலத்தில் ஒற்றுமைப் பயணத்துக்கு வரவேற்பு கிடைக்காது என்றார்கள். ஆனால், ஹரியாணாவில் மற்ற இடங்களைக் காட்டிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒற்றுமைப் பயணத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவினுடைய குரல் ஒடுக்கப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களிடம் அச்ச உணர்வு பரப்பப்படுகிறது. ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் காட்ட வழிவகை செய்யப்படுகிறது. மக்களிடம் வெறுப்புணர்வு பரப்பப்பட்டு அவர்களிடம் பிரிவினைவாதம் பரப்பப்படுகிறது. அதற்கு எதிரானதுதான் இந்த ஒற்றுமை யாத்திரை. நாங்கள் இந்த நாட்டினை நேசிக்கிறோம். இந்த நாட்டிலுள்ள மக்கள், விவசாயிகள், ஏழை மக்கள் அனைவரையும் நேசிக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம். நாட்டின் உண்மையான குரலை மக்களுக்கு எடுத்துச் செல்வதே இந்த ஒற்றுமைப் பயணத்தின் நோக்கம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT